ம.ம.க. கூட்டணி போட்டியிடாத தொகுதிகளில் யாருக்கு ஆதரவு?


சமூக ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற இடங்களில் ம.ம.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்காக முஸ்லிம் சமுதாயமும், தமுமுக - மமக தொண்டர்களும் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.


மனிதநேய மக்கள் கட்சி சமூக ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் புதிய தமிழகம் கட்சியுடன் இணைந்து இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறை, மத்திய சென்னை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியும், தென்காசியில் புதிய தமிழகமும் போட்டியிடுகின்றன.


இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சி போட்டியிடும் இடங்கள் தவிர மற்ற இடங்களில் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மகேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தமுமுக தலைமையகத்திற்கு நேரில் வந்து ஆதரவு கோரினர்.

முஸ்லிம் சமூகத்தின் வாக்கு பலத்தையும், மனிதநேய மக்கள் கட்சி ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களிடம் பெற்றிருக்கும் ஆதரவையும் அரசியல் கட்சிகள் உணர வேண்டும், சமுதாயத்தின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே மனிதநேய மக்கள் கட்சி இந்தத் தேர்தலில் களம் கண்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை நமது சமுதாயத்தை உதாசீனப்படுத்திய திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதேபோல மதவாத பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியடைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாம் மற்ற தொகுதிகளில் நமது ஆதரவை வழங்க வேண்டியுள்ளது.


நமது பலத்தை உணர்ந்து சமுதாயத்தில் நமது கட்சிக்கு இருக்கும் வாக்கு வலிமையை அறிந்து நம்மிடம் நேரில் வந்து ஆதரவு கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை அவர்கள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி ஆதரிக்கும். ஆனால் இது ஆதரவு மட்டும்தான், களத்தில் இறங்கி வேலை செய்வது, வெற்றிபெற உழைப்பது என்பது அர்த்தமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் தென்காசியில் நமது கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் போட்டியிடுவதால் அங்கு போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு இல்லை.
திமுக, அதிமுக, பாஜக நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகளிலும் இதேபோல் காங்கிரஸ், அதிமுக, பாஜக போட்டியிடும் தொகுதிகளிலும் அந்த கட்சிகளைத் தவிர வேறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கோ அல்லது நற்பண்பு கொண்ட வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கு மாறு ம.ம.க. கேட்டுக் கொள்கிறது.


இதுதான் பாராளுமன்றத் தேர்தலில் நமது நிலைப் பாடாகும். பரவலான வாக்கு வங்கி இருந்தும் பொருளாதார பலமின்மையால் ஒருசில தொகுதிகளில் மட்டுமே நாம் போட்டியிடும் சூழல் உள்ளதால் நாம் போட்டியிடும் தொகுதிகளில் கடுமையாக உழைக்கவும், கவனம் செலுத்தவும் வேண்டியிருப்பதால் மற்ற தொகுதிகளில் நாம் இதுபோன்ற நிலைப்பாடுகள் எடுப்பது தவிர்க்க முடியாதது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் நமக்கு நேர்வழி காட்டப் போதுமானவன்.

வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் வாக்குசேகரிப்பு

துறைமுகம் பகுதியில் வாக்கு சேகரிப்பு


ம.ம.க மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலி இன்று 26.04.09 துறைமுகம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.அப்போது பொது மக்களிடம் பேசி வாக்கு சேகரித்த காட்சிகள்.

நமது சின்னம் - ரயில் என்ஜின்

மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் வேட்புமனு தாக்கல்


மனித நேய மக்கள் கட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதியில்
S. ஹைதர்அலி போட்டியிடுகிறார். இவர் இன்று சென்னை மாநகராட்சியில் தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமூக ஜனநாயக கூட்டணி சார்பில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக மத்திய சென்னை தொகுதியில் போட்டியில் நான், அத்தொகுதியை வளம் பெற செய்ய நடவடிக்கை எடுப்பேன். இதுவரை இங்கு வெற்றி பெற்றவர்கள் தங்களை மட்டும் வளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

வெள்ள நிவாரண நிதி கூட அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வில்லை. அதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. நான் வெற்றி பெற்றால் இது போன்ற குறைபாடுகள் களையப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் சமமாக மதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்புமனு தாக்கலின்போது, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திர பிரசாத், இரட்டை மலை சீனிவாசன் பேரவை தலைவர் நடராஜன், வக்கீல் சம்சுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக வேட்பாளர் ஹைதர் அலி ஆயிரக் கணக்காக கட்சி தொண்டர் களுடன் ராஜா அண்ணா மலை மன்றத்தில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்தார். பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, அமைப்பு செயலாளர் ஜெயினுலாதீன், தலைமை நிலைய செயலாளர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வக்பு வாரியத் தலைவர் பதவி ராஜினாமா

பத்திரிக்கை அறிக்கை

வக்பு வாரியத் தலைவர் பதவி ராஜினாமா!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான செ.ஹைதர் அலி அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

நான் இதுவரை வகித்து வந்த தமிழக வக்பு வாரியத் தலைவர் பொறுப்பிலிருந்து சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன்.


எனது கடமையை செம்மையாக செய்ய ஒத்துழைத்த அனைத்து நல் இதயங்களுக்கும் சமுதாய சொந்தங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய சென்னை

மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளது முழு விவரம்

வில்லிவாக்கம், எழும்பூர் (தனி) துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர்.

வில்லிவாக்கம்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 54 வரை மற்றும் 62

எழும்பூர் (தனி)

சென்னை மாநகராட்சி வார்டு எண் 42, 45 முதல் 47 வரை, 61, 71, 72 மற்றும் 100 முதல் 106 வரை

துறை முகம்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43,44,48,49 மற்றும் 80

சேப்பாக்கம் (திருவல்லிக்கேணி)

சென்னை மாநகராட்சி வார்டு எண் 79, 81 முதல் 93 வரை மற்றும் 111.
ஆயிரம் விளக்கு, சென்னை மாநகராட்சி வார்டு எண் 76 முதல் 78 வரை, 107 முதல் 110 வரை, 112 முதல் 114 வரை 118 மற்றும் 119.

அண்ணா நகர்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 65 முதல் 70 வரை மற்றும் 73 முதல் 75 வரை